எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3.!
chandrayan 3 flying sky at today in sriharikotta
எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3.!
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்வதற்கு ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 என்றத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கி தற்போது நிறைவு செய்துள்ளனர்.
இந்தச் சந்திரயான்-3 விண்கலம் தற்போது எல்.வி.எம். 3 என்று அழைக்கப்படும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது.
ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.
பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, வெள்ளிக்கிழமையான இன்று பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
English Summary
chandrayan 3 flying sky at today in sriharikotta