சந்திரயான்-3 | அப்படியே தத்துரூபமாக வடிவமைத்த மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வாழ்த்து தெரிவித்து, ஓடிசாவில் மணற் சிற்ப கலைஞர்கள் மணற் சிற்பம் வடிவமைத்துள்ளனர். 

இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திரயான் 3 -ன் விக்ரம் லேண்டர்   நிலவில் தரையிறங்கியது போல் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 மிஷனின்படி நிலவின் தென் துருவம் அருகே இன்று மாலை 6.04 மணிக்கு  விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. 

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்து 'பிரக்யான் ரோவர்' நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. 

இந்நிலையில், பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் மாணவர்கள், ஒடிசா கடற்கரையில் நிலவு, விக்ரம் லேண்டர் மற்றும் விண்கலனை பிரதிபலிக்கும் வகையில் மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். 

மேலும், அந்த மணற்சிற்பதில் ‘சந்திரயானுக்கு வாழ்த்துகள்’ என்று மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrayan 3 mission odisha sand art


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->