சந்திராயன்-4 - அடுத்த பயணத்திற்குத் தயாராகும் இந்தியா.!   - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு சாதனை படைத்தது. இந்த நிலையில், சந்திரயான்-4 தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:- "நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-4 தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து சில மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் எனவும் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா) அழைக்கப்படும் என கூறியுள்ளார்.

சந்திரயானின் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன், அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும். அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர் அதிலிருந்து வெளியே வரும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேமித்து, பூமிக்கு அனுப்பும்.

மேலும் சந்திரயான்-4 (Chandrayaan-4) தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சந்திரயான் 4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

charayan 4 update in isro


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->