இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகும் 'சீட்டா' ரக சிறுத்தை - பிரதமர் மோடி வழங்கல்.!
Cheetah Leopard to ReIntroduce in India
இந்தியாவில், வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. கடந்த 1952-ம் ஆண்டு இந்த சிறுத்தை இனம் அழிந்து விட்டதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக, ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 'சீட்டா' ரக சிறுத்தைகளை பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது. விமானம் மூலம் நமீபியாவில் இருந்து, ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, வருகிற 17-ந்தேதி காலையில் டெல்லி கொண்டு வரப்படுகின்றன.
டெல்லியிலிருந்து, ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தில் உள்ள "குணோ தேசிய பூங்காவுக்கு" கொண்டு செல்லப்படுகின்றன. இந்த எட்டு 'சீட்டா' ரக சிறுத்தைகளை பிரதமர் மோடி பூங்காவில் விடுகிறார். அன்று, அவரது பிறந்த நாள் என்பது சிறப்பான ஒன்றாகும்.
English Summary
Cheetah Leopard to ReIntroduce in India