காஞ்சிபுரத்தில் பெரும் சோகம்! பாட்டியுடன் பலியான பேரக்குழந்தைகள்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே வெங்கச்சேரி தடுப்பணையில் நீரில் குளிக்கச் சென்ற போது, மணலில் சிக்கி மூவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடம்பரைகோயில் பகுதியைச் சேர்ந்த பத்மா (வயது 55) தனது பேரக்குழந்தைகள் தீபக்குமார் (வயது 16) மற்றும் வினிஷா (வயது 9) ஆகியோருடன் வெங்கச்சேரி தடுப்பணைக்கு சென்றார். 

அவர்களுடன் உறவினர் வினோத்குமாரும் இருந்தார். குழந்தைகள் நீரில் குளிக்க இறங்கியபோது, அவர்கள் நீருக்கடியில் உள்ள மணலில் சிக்கினர். இதை கண்ட பத்மா அவர்களை காப்பாற்ற முயன்றபோது, அவரும் மணலில் சிக்கினார்.  

அவர்களை காப்பாற்ற முயன்ற வினோத்குமாரும் மணலில் சிக்கியபோதும், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டனர். ஆனால், பத்மா, தீபக்குமார், மற்றும் வினிஷா மூவரும் மூழ்கினர்.  

தகவலறிந்த தீயணைப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. சடலங்கள் உடற்கூறு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.  

இந்த சம்பவம் குறித்து மாகரல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanjipuram River side accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->