மும்பையில் பேனர் விழுந்த எதிரொலி - சென்னையில் ஒரு வாரம் கேடு கொடுத்த மாநகராட்சி ஆணையர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய புழுதிப் புயலால் பெட்ரோல் பங்க் அருகே இருந்த ராட்சத பேனர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, 5,000க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளால் விபத்து ஏற்பட்டு, உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது குறித்து, செய்தி வெளியானதைத்தொடர்ந்து, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், பலகைகள் அனைத்தையும் அகற்றும்படி, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, சென்னையில் மக்களுக்கு அச்சுறுத்துல் ஏற்படும் வகையில் உள்ள விளம்பர பதாகைகள், பலகைகள் அனைத்தையும் அகற்ற அறிவுறுத்தி உள்ளோம். மேலும், நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ள விளம்பர பதாகைகள், பலகைகளின் பாதுகாப்பு உறுதி தன்மையை ஆராயவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டில் மே மாதம் வரை, 461 விளம்பர பதாகைகள், பலகைகள் அகற்றப்பட்டன. இம்மாதத்தில் இதுவரை, 53 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்றும்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, மாநகராட்சி மண்டல அலுவலங்கள் வாயிலாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பேனர்களை ஏழு நாட்களுக்குள் அகற்றாவிட்டால், மாநகராட்சியே அவற்றை அகற்றி விட்டு, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai corporation commissioner order remove bannar in chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->