ஒடிசா: பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு...!
Chief Minister announces relief to 10 killed bus accident in odisha
ஒடிசாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 3 லட்சம் முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரகள் தனியார் பேருந்தில் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது இரவு 1 மணியளவில் கஞ்சம் மாவட்டத்தின் திகபஹண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வந்தபோது, அவழியாக எதிர் திசையில் வந்த மாநில அரசு பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த விபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நவீன் பட்நாயக், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
English Summary
Chief Minister announces relief to 10 killed bus accident in odisha