ஓணம் பண்டிகை ரத்து - அதிரடி உத்தரவிட்ட கேரளா முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


கேரளா மக்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை சுமார் 10 நாட்கள் கொண்டாடபடுகிறது. அதன் படி இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட சில நாட்களே உள்ளது. அதிலும், வயநாடு மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.

இந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரைக்கும் 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த கடும் பேரிழிப்பால் கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு பேரழிவால் ஓணம் கொண்டாட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister pinarayi vijayan cancelled onam festival in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->