ம.பி : ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


ம.பி : ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல்.!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் முன்னூறு அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

குழந்தை 100 அடி ஆழத்தில் சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்ட நிலையில், சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது. உடனே அதிகாரிகள் மீட்கப்பட்ட குழந்தையை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆழ்துளை கிணற்றின் குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- "மனம் அளவற்ற வேதனையும் துயரமும் நிறைந்துள்ளது. தொடர் மற்றும் அயராத முயற்சிகளுக்குப் பிறகும், சேஹூரில் உள்ள முங்காவாலியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. 

இந்த துக்க நேரத்தில் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருடன் நாம் அனைவரும் இருக்கிறோம். சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் ஆற்றலையும் இறைவன் தர பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister sivaraj singh savukhan condoles to child died drowned in borewell in MP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->