முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

தமிழகத்தில் 19711976 வரை நடைபெற்ற கலைஞர் ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்தவர் சபாநாயகம். தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலினும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இராஜாஜி, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய நூற்றாண்டு நாயகர், முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

விடுதலைக்கு முன்பான ஐசிஎஸ் காலத்திலிருந்து தற்போதுள்ள ஐஏஎஸ் முறை வரை பல ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணி வரலாற்றின் அடையாளமாக திகழ்ந்தவர்.

ஆட்சிப்பணிக்கு வருவதற்கு முன்பாக இராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர் நேர்மையும், துணிச்சலும், தலைமைப்பண்பும், செயல்திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர்.

கடந்த ஆண்டு அவருடைய நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவரது சிறப்புகளை எடுத்துக்கூறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரும் பேறு. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்துள்ள அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister stalin condoles to former chief secretary death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->