வயிற்று வலியால் துடித்த இளம்பெண் - ஸ்கேனில் காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனக்கு மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்த அவர், மருந்து கடையில் அவ்வப்போது கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், அந்த பெண் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில், குழந்தையின் எலும்புக்கூடு வயிற்றில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் எலும்பு கூட்டை அகற்றினர். 

தற்போது அந்த இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் பரிந்துரை இன்றி, தாங்களாகவே கருத்தடை மாத்திரை சாப்பிடுவது விபரீதத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child bone in woman stomach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->