ம.பி : ஆழ்துளை கிணற்றிலிருந்து 55 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிப்பு.!! - Seithipunal
Seithipunal


ம.பி : ஆழ்துளை கிணற்றிலிருந்து 55 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிப்பு.!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் முன்னூறு அடி ஆழமுடைய ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்தக் குழிக்குள் கடந்த மூன்று நாளுக்கு முன்பு இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த மீட்புப் பணி மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் மீட்புப் படையினர் இன்று குழந்தையை மீட்டனர். 

அப்போது குழந்தை மயக்கமடைந்த படி இருந்தது. உடனே மீட்புப் படையினர் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 55 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

children died drowned bore well in madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->