இனி இந்த வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கூடாது -  உயர் நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


குஜராத் உயர் நீதிமன்றம், 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்தினால் பெற்றோர் மீது சட்டவிரோத செயலில் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் 2023-2024 கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை காண குறைந்தபட்ச வயது 6 ஆக நிர்ணயித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்தபோது இந்த கருத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்த நடைமுறையால் ஒன்றாம் வகுப்பில் 6 வயதை நிறைவு செய்தால் மட்டுமே சேர்க்க முடியும் என்பதால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பாக குழந்தைகளுக்கு 6 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என்று மாநில அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தி இருந்தது. 

இதனால் நிகழ்வாண்டில் 9 லட்சம் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநில அரசின் இந்த நடவடிக்கை கல்வி பெறும் குழந்தைகளின் உரிமையை மீறும் செயலாகும் என்று மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

இதனைக் கேட்ட நீதிபதிகள் கல்வி பெரும் உரிமைச் சட்டம் அடிப்படையில் ஜூன் 1ஆம் தேதி 3 வயது நிறைவு செய்யாத குழந்தையை மழலையர் பள்ளியில் சேர்க்க அனுமதி இல்லை. 

இந்த விதிமுறையை மீறினால் 1 ஆம் வகுப்பு சேர்க்கை காண வயது வரம்பு தொடர்பாக மாநில அரசு கொண்டுவரப்பட்டுள்ள நடைமுறையில் எந்தவித நிவாரணத்தையும் பெற்றோர்கள் கூற முடியாது.

6 வயது நிறைவு செய்தால் மட்டுமே குழந்தைகளை இலவச மட்டும் கட்டாய கல்வி பெறும் உரிமையின் கீழ் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுகின்றனர். 

மேலும் இந்தச் சட்டம் 6 வயது நிறைவு செய்த குழந்தைகள் கல்வியை மறுக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது என தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

children under this age forced school


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->