பெங்களூரில் இரு குழந்தைகளுக்கு சீனாவின் புதிய வைரஸ் பாதிப்பு! - Seithipunal
Seithipunal



2019 ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதைப் போன்று, தற்போது சீனாவில் புதிய வைரஸ் பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்படுகின்றனர். 

காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த வைரஸ், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.

சுவாச பிரச்சனைகள் அதிகரித்துள்ள நிலையில், சீன அரசு "இது குளிர்காலத்தில் இயல்பானதுதான்" என தெரிவித்தாலும், பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது. சீனாவின் பரவலால் மற்ற நாடுகளும் எச்சரிக்கையாக இருக்கின்றன. 

இந்த நிலையில், கர்நாடகாவில், பெங்களூருவைச் சேர்ந்த 8 மாத குழந்தையில் முதல் எச்.எம்.பி.வி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை வெளியே செல்லாத நிலையில், வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குழப்பமாக உள்ளது. 

மேலும் ஒரு குழந்தைக்கும் வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இதை உறுதி செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China virus infection bengaluru 2 babys


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->