சீனாவிற்கு புறப்பட்ட சீன உளவுக் கப்பல்..! - Seithipunal
Seithipunal


நேற்று சீன உளவுக் கப்பலான, 'யுவான் வாங் 5' இலங்கை துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டது.

சீனாவின், 'யுவான் வாங் 5' உளவுக்கப்பலை ஆகஸ்ட் 11 -ந்தேதி முதல் 17 -ந்தேதி  வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது. இந்த கப்பலில் செயற்கைக்கோள் மற்றும் 'பாலிஸ்டிக்' ஏவுகணைகள் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளதால், நம் ராணுவ தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் அபாயம் இருந்ததால், இதை அம்பன்தோட்டாவில் நிறுத்திவைக்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து உளவுக்கப்பலுக்கு இலங்கை அனுமதி தர மறுத்தது.சீன அரசு அழுத்தம் கொடுத்ததை அடுத்து, ஆகஸ்ட் 16 -ந்தேதி முதல் 22 -தேதி வரை கப்பலை நிறுத்தி வைக்க இலங்கை ஒப்புக்கொண்டது. கடந்த 16ல் அம்பன்தோட்டா துறைமுகம் வந்த கப்பல், இலங்கை நேரப்படி நேற்று மாலை 4:00 மணிக்கு சீனாவிற்கு புறப்பட்டு சென்றது. இலங்கையில் இருந்து புறப்பட்ட உளவுக்கப்பல், சீனாவின் ஜியாங் இன் துறைமுகம் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinese spy ship left for China..!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->