கேதார்நாத் : மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நிலச்சரிவு - 200 யாத்திரீகர்கள் கதி என்ன?! - Seithipunal
Seithipunal



கேதார்நாத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கனமழை பெய்ய ஆரம்பித்ததில் மந்தாகினி ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகரித்து கரை புரண்டு ஓடியதில், ஆற்றின் கரையில் உள்ள நடைபாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதன் காரணமாக சுமார் 30 மீ தூரத்திற்கு நடைபாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் யாத்திரீகர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

இந்நிலையில் கேதார்நாத்தில் சுமார் 150 முதல் 200 யாத்திரீகர்கள் சிக்கித் தவிப்பதாகவும், அவர்கள் நிலை என்ன என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சிக்கியுள்ள யாத்திரீகர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF ), காவல்துறையினர் மற்றும் உள்ளூரில் உள்ள அதிகாரிகள் பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே கேதார்நாத்தில் மற்றொரு இடத்திலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேதார்நாத்  நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டு நடைபாதை முழுவதும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேதார்நாத்தில் ஏற்பட்ட இந்த 2 மேக வெடிப்புகளிலும் இதுவரை எந்த உயிர்ச் சேதமும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அங்கு சிக்கியுள்ள 200 யாத்திரீகர்கள் கதி என்ன என்றும் இன்னும் தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CloudBurst And Landslide in Kedarnath 200 Pilgrims Stranded


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->