திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் போராட்டம் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை பல்லாவரத்தில் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

"தமிழை 'தமிழ்' எனச் சொல்லி அழைப்பதை விட வேறு எதுவும் இன்பமாக இருக்க முடியாது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இன்றைய காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

அன்னை தமிழை அழிக்க அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது. இந்தியை அல்ல, எத்தனை மொழிகளை திணித்தாலும் நம் தமிழ் அழிந்துவிடாது. ஆனால் தமிழரின் பண்பாடு அழிந்துபோகும் என்று பெரியார் சொன்னார். இந்தி திணிப்பை முதலில் எதிர்தது பெரியார்; இதையடுத்து 1963-ல் கருணாநிதி தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது.

மொழிப்போராட்டத்தின் மையப்புள்ளியாக தி.மு.க. இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்களது உயிர்களை நீத்தனர். உயிர்நீத்த தியாகிகள்தான் தமிழ்த்தாயின் மூத்த பிள்ளைகள். அதன் மூலம் தமிழகத்தை இருமொழிக் கொள்கை கொண்ட மாநிலமாக பாதுகாத்தோம்
மொழிப்போர் இன்னும் முடியவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

மீண்டும் மும்மொழிக் கொள்கையை புதிய கல்விக் கொள்கை மூலம் திணிக்க முயற்சி நடைபெறுகிறது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தியை திணிக்க முயற்சி செய்கின்றனர். யு.ஜி.சி. புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடைபெறும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin announce dmk students team pritest in delhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->