காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி.!
cm stalin mourning to army man lachmanan
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.
இந்நிலையில், இவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று அதிகாலை காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.
வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
cm stalin mourning to army man lachmanan