116 பேர் உயிரிழப்பு... ஹாத்ரஸ் விரையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், ஹாத்ரஸ் புல்ராய் கிராமத்தில் திறந்தவெளி மைதானத்தில் நேற்று 'போலே பாபா' என்ற ஆன்மீக குழுவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர். மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறும் போது கடும் கூட்ட நெரிசலை ஏற்பட்டது. 

போலே பாபாவிடம் ஆசிப் பெறவும் அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் பொதுமக்கள் முண்டியடித்த போது நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்த கூட்டம் நெரிசலில் சிக்கி 108 பெண்கள், 7 குழந்தைகள் ஒரு ஆண் என 116 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இவர்களில் 72 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் நடைபெற்ற மைதானம் வழுக்கும் தன்மையுடன் இருந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் பலர் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹாத்ரஸ் பகுதியில் சம்பவம் நடைபெற்ற இடத்தினை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நேரில் சென்று பார்வையிட உள்ளார். 

இதற்கிடையே இந்த சம்பவத்தில் போலே பாபாவின் பங்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Yogi Adityanath visit Hathras


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->