இடிந்து விழுந்த வகுப்பறை சுவர்! அடுத்தடுத்து கீழே விழுந்த மாணவர்கள்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் உணவறிந்து கொண்டிருந்தபோது திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் வாதோ தாராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகூல் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

இந்தநிலையில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. வகுப்பறவையில் மாணவர்கள் அமர்ந்த உணவு அறிந்து கொண்டிருந்தபோது வகுப்பறையின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி உள்ளனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த ஆசிரியர்கள் மாணவர்களை பத்திரமாக வேறொரு அறைக்கு மாற்றினர்.

வகுப்பறையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வகுப்பறை இடிந்து விழும்போது சுவரின் அருகே இருந்த மாணவர்கள் கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து குஜராத் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Collapsed classroom wall collapsing video


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->