நீட் வினாத்தாள் கசிவு - கல்லூரி மாணவி கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என்று, பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுவரைக்கும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீஹார், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் உள்ள பெட்டியில் இருந்து, நீட் வினாத்தாளை திருடியதாக இரண்டு பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும், நான்கு நாட்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் 'சால்வர் கேங்' என்ற பெயரில் நீட் வினாத்தாள் கசிய விட்ட குழுவில் மருத்துவ கல்லுாரி மாணவி சுரபி குமாரி என்பவருக்கும் பங்கு உள்ளதை, சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்து கைது செய்தனர். இதனால், நீட் வினாதாள் கசிவு விவகாரத்தில் இதுவரைக்கும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college girl arrest for neet malpractice case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->