உ.பியில் பயங்கரம் || ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு கத்திக் குத்து.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யாராஜ் பகுதியில் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருபவர் லாரேப் ஹாஸ்மி. இவர் வழக்கம் போல் நேற்று பேருந்தில் கல்லூரிக்கு சென்றார். 

அப்போது பேருந்தில் பயணசீட்டு விவகாரம் தொடர்பாக நடத்துநருக்கும், லாரேப் ஹாஸ்மி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திமடைந்த லாரேப் ஹாஸ்மி தனது பேக்கில் வைத்திருந்த கசாப்புக்கடை கத்தியை எடுத்து நடத்துனரை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார்.

இதைப்பார்த்த பயணிகள் நடத்துனரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே போலீஸார் லாரேப் ஹாஸ்மியை அதிரடியாக கைது செய்தனர். ஆனால், லாரேப் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். 

இதனால், போலீஸார் தங்களின் பாதுகாப்பு கருதி அவரது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் லாரேப் சுருண்டு கீழே விழுந்தார். அவரை போலீஸார் மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student arrested for attack bus conductor in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->