சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிதாக 8 நீதிபதிகள்... கொலிஜியம் பரிந்துரை..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை வழங்கி உள்ளது. அதன்படி 5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஆய்வு செய்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பும். அதன் அடிப்படையில் குடியரசு தலைவர் புதிய நீதிபதிகளுக்கான நியமனத்திற்கு ஒப்புதல் அளிப்பார். கொலிஜியம் பரிந்துரை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொலிஜியம் வழங்கிய பரிந்துரை பட்டியலில் பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய நீதித்துறை அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோன்று வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன், லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி, பிள்ளைப்பாக்கம் பாகுகுடும்பி பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய வழக்கறிஞர்களையும் நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகளின்  தற்போது 52 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். புதிய பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமித்தால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Collegium recommended 8 new judges for ChennaiHC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->