பகீர் தகவல்... மோடியை விமர்சித்தால் நீதிபதி பதவி கிடைக்காது... கொலிஜியம் ஓபன் டாக்..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் இடங்களை நிரப்ப வேண்டும் என நீண்ட நாட்களாக வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 8 புதிய நீதி பதிலை நியமிக்க பரிந்துரை வழங்கி உள்ளது.

இந்த நிலையில் கோலிஜியம் பரிந்துரைத்த மூன்று நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசுக்கும் நீதிபதிகளை நியமிக்கும் குளிர்ஜியம் அமைப்புக்கும் இடையான மோதல் போக்கு உச்சத்தை பெற்றுள்ளது.

மத்திய அரசால் நிராகரிக்கப்படும் நீதிபதிகள் குறித்தான தகவல் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. ஆனால் தற்பொழுது மத்திய அரசு தெரிவிக்கும் காரணங்கள் பொதுவெளியில் போட்டு உடைத்து உள்ளது. ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் சோராப் கிர்பாலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் அதனை மத்திய அரசு நிராகரித்தது. இதற்கு காரணம் அவர் தன்பாலின உறவில் இருப்பவர் என்று மத்திய அரசு தெரிவித்ததை கொலிஜியம் பொதுவெளியில் தெரிவிக்க அது பேசும் பொருளாக மாறியது. 

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொலிஜியம் தனியாக பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அவர் பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால் அவரது பரிசீலனையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில் அவரை மீண்டும் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு தெரிவித்துள்ள காரணங்கள் விதி வீரிய செயல் அல்ல என்பதால் மீண்டும் பரிந்துரை செய்துள்ளதாக கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Collegium said who criticize Modi they will not get judgeship


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->