நவம்பர் 7-ந்தேதி பொது விடுமுறை - எந்த மாநிலத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்று சத் பூஜை. இந்த பண்டிகை, பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசம் மாநிலத்தில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. இது சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உண்ணாநோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட நான்கு நாள் சடங்குகள் மற்றும் மரபுகளின் கடுமையான வழக்கத்தை உள்ளடக்கியது.

இது குறித்து முதலமைச்சர் அதிஷி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "சத் பண்டிகைக்காக நவம்பர் 7-ந்தேதி விடுமுறை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

பூர்வாஞ்சலின் சகோதரிகள் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட முடியும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த விடுமுறையை உறுதிப்படுத்தும் தனது கையொப்பமிடப்பட்ட உத்தரவையும் அவர் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming november public holiday in delhi for sath pooja


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->