ராமநாதபுரம் : ஓட்டுக்காக இப்படியா!...தவெக-வின் செயலுக்கு எகிறும் கண்டனங்கள்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 19-ம் தேதி இரவு திடீரென வெடித்த மேக வெடிப்பால் கனமழை பெய்யத் தொடங்கியது. நேற்று வரை விட்டுவிட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால்  ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மேலும், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 இடங்களில்   வரலாறு காணாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டு நாட்களாக முடங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவடட்த்தில், கடந்த 69 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத  44 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 ஜே.சி.பிக்களும், 47 மோட்டார் பம்புகளும், 111 படகுகளும், 63 மரம் அறுக்கும் எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மண்டபம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். அப்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கழுத்தில் கட்சி துண்டுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு நிவாரணப் பணியில் இப்படி ஒரு விளம்பரமா என்று சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram like this for votes condemnation of tvk actions


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->