துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை திருச்சிக்கு வருகை தருகிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் 1 மணிக்கு திருச்சி வருகை தருகிறார். அவருக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் அவர் கார் மூலம் துறையூர் புறப்பட்டு செல்கிறார்.

பின்னர் துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆளுயுர வெண்கல சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து பெரம்பலூர் பேருந்து நிலையம் தர்மன் காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி. அருண் நேருவின் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் படிப்பகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து விமான மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy chief minister uthayanithi stalin come in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->