மகிழ்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை - இதோ உங்களுக்காக.!
commercial cylindar price decrease
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதேபோன்று தான் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன.
அதன் படி இந்த விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஏப்ரல் மதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.
அதாவது, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.30.50 விலை குறைந்து ரூ.1,930 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.818.50 ஆகவே விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
commercial cylindar price decrease