நாக்பூர் வெடி விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு.!
compensation announce to nakpur factory fire accident death peoples
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சோலார் இன்டஸ்டிரீஸ் என்ற தொழிற்சாலையில் பேக்கிங் செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் சிக்கி ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இந்த நிலையில், நாக்பூர் வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், "விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார். விரைவில் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட உள்ளேன்" என்று தெரிவித்தார்.
English Summary
compensation announce to nakpur factory fire accident death peoples