விளையாட்டு அமைச்சராக இருந்தபோது பணத்தில் விளையாடியதாக நடிகை ரோஜா மீது ரூ.100 ஊழல் புகார்! - Seithipunal
Seithipunal


நடிகையும் ஆந்திர மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா மீது ரூ.100 கோடி ஊழல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. அதில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் ஆனார்.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திரா மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நடிகை ரோஜா விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அந்த காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டி நடத்த ரூ. 110 நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக அப்போதே எதிர்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த நடிகை ரோஜா  ரூ. 100 கோடி ஊழல் செய்ததாக ஆந்திர மாநிலம் விளையாட்டு அமைப்பின் ஒன்றின் தலைவர் பிரசாத் என்பவர் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரியின் அடிப்படையில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டது.

விளையாட்டு கருவிகள் வாங்கியது, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியது இப்படி அனைத்து விஷயங்களையும் தீவிரமாக விசாரணை நடத்தி அறிக்கையாக அளிக்கும்படி விஜயவாடா கமிஷனருக்கு உத்தரவிடுபட்டிருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நடிகர் ரோஜா அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complaint of corruption of Rs100 crore against actress Roja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->