துப்பட்டா கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!
Confession of the murderer Shocked police
1994 ஆம் ஆண்டு தர்ஷனா (வயது 21) என்ற பெண்ணின் கொலையில் தொடங்கி தற்போது, கோவாவின் துப்பட்டா கொலைகாரன் மகாநந்த் 16 பெண்களை கொன்றதாக அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக இரண்டு கொலை வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாநந்த், கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி பரோல் அளிக்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதன் மூலம் இவரது செய்தி மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் 14 கொலை வழக்குகள் மகானந்த் மீது சாட்டப்பட்டு, இன்னும் விசாரணை நடந்து கொண்டுள்ளது.
கொலைகாரன் மகானந்த் நாயக் (வயது 30), குலாபி என்ற எதிர்வீட்டு பெண்ணை 1994 ஆம் ஆண்டு கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் முதல் கொலையாக தொடர்ந்தது.
இவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகானந்த் பெண்களை கொலை செய்யும்போது அவர்கள் துடிதுடித்து கதறுவதை நான் ரசிப்பேன் என காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் அனைத்து பெண்களையும் அவர்கள் அணிந்து இருந்த துப்பட்டாவை வைத்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இவர் முதலில் பெண்களை பார்த்து பேசி, பழகி திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து, பின்னர் அவர்களை நம்ப வைத்து கொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவரின் அனைத்து வழக்குகளிலும், பெண்களிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொண்டு அவர்களுடன் பழகி பின்னர் அவர்களை கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது என காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
14 வழக்குகள் இன்னும் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கபட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Confession of the murderer Shocked police