நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடி.. கலக்கத்தில் மாணவர்கள்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வரும் மே 5ம் தேதி நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் பெரும்பாலானோர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முற்பட்டதால் சர்வர் கோளாறால், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஆங்காங்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு புகைப்படம், கையொப்பம் இல்லாமல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் ஆனதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதேபோன்று தவறாக விண்ணப்பம் பதிவு செய்து விட்டார்களா? என பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே தற்போது எழுந்துள்ள சர்வர் கோளாறை விரைந்து சரி செய்ய வேண்டும் என பெற்றோர்களும் மாணவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Confusion in UG NEET exam hall ticket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->