காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் - சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் எம்.எல் ஏ.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, காக்வாட் தொகுதியைச் சேர்ந்த அக்கட்சி எம்.எல்.ஏ., ராஜு காகே பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது;- "இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால், இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும். நான் என் வார்த்தையில் எப்போதும் உறுதியாக இருப்பேன்.

மோடி, மோடி என்று ஏன் அனைவரும் அவர் பின்னாலேயே செல்கிறீர்கள். நாட்டில் 140 கோடி மக்கள் உள்ளனர். இங்குள்ள இளைஞர்களும் மோடி மோடி என்றே சொல்கின்றனர். இங்கு உங்களுக்கு ஓர் பிரச்னை என்றால் அவர் வரமாட்டார். நாங்கள்தான் வருவோம்" என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass mla raju kage election campaighn in karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->