நீட் முறைகேடு விவகாரம் - நாடு முழுவதும் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருபது வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது தேசிய தேர்வு முகமை மேல் தவறு இல்லை’ என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்த சதிச்செயலில் பள்ளி முதல்வர், இயற்பியல் ஆசிரியர், பல நீட் பயிற்சி மையங்களும் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு, அமைப்பு ரீதியாகவே மாற்றம் தேவைப்படுவதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்தத் தேர்வால் நீட் ஒழிப்பு போராளி மாணவி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள், இத்தேர்வால் பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

தகுதிக்கான அளவுகோல் என்று பொய்வேடம் தரித்த நீட்தேர்வு, சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவி பாதிக்கிற ஒரு மோசடி என்பது திரும்ப திரும்ப நிரூபணம் ஆகிவிட்டது. மாணவர்கள், ஏழைகள், சமூகநீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறையை ஆதரிப்பதை மத்திய அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மை மற்றும் தொடர் மவுனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் பேசப்பட உள்ளது. அதில், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என்று கட்சி தலைமை வலியுறுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass party protest against neet malpractice issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->