தேர்தல் பயமா?! சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை அறிவித்த முதல்வர்!
congress announce Rajasthan Community wice census
ராஜஸ்தான் மாநிலத்திற்கு இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளநிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் (காங்கிரஸ்) அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மையக்குழு கூட்டத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், "பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்டது போல ராஜஸ்தான் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் விகிதாச்சார முறை குறித்த ராகுல் காந்தியின் அறிவுரைகள் மாநிலத்தில் மேலும் மேம்படுத்த உதவும் என்றும், கட்சியின் ஆணையினை மனதில் வைத்து, ராஜஸ்தான் மாநில அரசு இந்த "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்ற பிரச்சாரத்தை அறிவித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து செய்ய முடியாததை, தேர்தல் நெருங்கியதும் செய்வேன் என்று காங்கிரஸ் சொல்வது, தேர்தல் தோல்வியின் பயம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கின்றன.
English Summary
congress announce Rajasthan Community wice census