காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் - கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது...!!! - Seithipunal
Seithipunal


கடந்த சனிக்கிழமை   தடை செய்யப்பட்ட இடத்தில், ஒரு சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் பிரமுகர் ஹிமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கொலை குறித்து ஹரியானா போலீசார் புலனாய்வு குழுவை அமைத்தனர். இந்நிலையில் ஹிமானி நர்வால்  கொலை வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.  மேலும், ' இவ்வழக்கு தொடர்பாக ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை  நடைபெற்று வருகிறது' எனக் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


நர்வாலின் தாயார் சவிதா:

இதுகுறித்து, நர்வாலின் தாயார் சவிதா கூறுவதாவது, " நர்வால் அரசியலில் மிகக் குறுகிய காலகட்டத்தில் வளர்ச்சி பெற்று வந்ததை பார்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் பொறாமைப்பட்டனர். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நான் அவளிடம் பேசினேன். மறுநாள் ஒரு கட்சி நிகழ்ச்சியில் மும்முரமாக செயலாற்றுவேன் என்று அவள்  கூறினாள். அதற்குப்பின் அவளை தொடர்பு கொண்டேன். ஆனால் அவளுடைய  தொலைபேசி அணைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.என் மகளுக்கு நீதி கிடைக்காத வரை நாங்கள் அவளை தகனம் செய்ய மாட்டோம்" என்று மகளை இழந்த சோகத்தில்  அவளின் தாயார் தெரிவித்தார்.

ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள்:
இதனையடுத்து ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள், நர்வால் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்பு உள்ள கட்சிப் பிரமுகர் என்று தெரிவித்திருந்தனர் . அவர் முன்னதாக ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பான விசாரணையை ஹரியானா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress leader Himani Narwal One person arrested in connection with murder case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->