பாஜக உருவாக்கிய பொய் கதைகள் தான் முக்கிய வியூகமாக இருந்தது...!!! - நவீன் பட்நாயக்
main strategy was false stories created by BJP Naveen Patnaik
'நவீன் பட்நாயக்', 9 -ஆவது முறையாக ஒடிசா பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தேர்தல் அதிகாரி பி.கே. டெப், கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மாநில கவுன்சில் கூட்டத்தில் நவீன் பட்நாயக் மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக்:
மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நவீன் பட்நாயக் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே எடுத்துரைத்ததாவது,"முடிவடைந்த சட்டசபை தேர்தலில் நம்முடைய கட்சி அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும், குறைந்த வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தோம்.
இதற்கு காரணம் பாஜக-வின் பொய் கதைகளை நாம் திறமையான முறையில் எதிர்கொள்ள முடியாததுதான்.
பிஜு ஜனதா தளம் கட்சிக்கு எதிராக பொய் கதைகளை உருவாக்கியது முக்கிய வியூகமாக இருந்தது.
இதை நாம் ஆக்ரோசமாக வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்" என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
English Summary
main strategy was false stories created by BJP Naveen Patnaik