ரீ ரிலீஸான சச்சின் படம் - ஒரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
sachin movie 2 crores collection
சினிமா துறையில் கடந்த சில நாட்களாக தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான 'சச்சின்' திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரீ-ரிலீஸான இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரீ ரிலீஸான சச்சின் திரைப்படம் முதல் நாளில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, சச்சின் திரை படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வசூல் இதுவரைக்கும் ரீ ரிலீஸான படங்களின் வசூலை விட அதிகம்.
English Summary
sachin movie 2 crores collection