கைது செய்யப்பட்டார் அஜித் பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ.!!
actor shine tom chacko arrested
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவு நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டலில் இருந்து ஒருவர் தப்பித்து செல்வதை போலீசார் பார்த்துள்ளனர்.
உடனே தப்பித்துச் சென்ற நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியதில் அது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாக்கோ ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்த அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு காவல் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் தாக்க வருவதாக நினைத்து விடுதியில் இருந்து தப்பி ஓடியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சாக்கோ ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானது குறிப்பிடத்தக்கது.
English Summary
actor shine tom chacko arrested