காங்கிரஸ் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி! சோனியா காந்தி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடத்தப்படும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்பொழுது கூட்டத்தில் சோனியா காந்தி அவர்கள், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடத்தப்படுவதாகவும், சமூக, மதநல்லிணக்க வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் உயிர் நாடியை காக்கும் வகையில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்த பேரணியில் இளைஞர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader sonia gandhi announced Rally from Kashmir to kanniyakumari on October two


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->