ராகுல் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வேண்டும்... உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்..!!
Congress letter to Amit Shah needs security for Rahul Gandhi
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கினார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்களைக் கடந்து தற்பொழுது காஷ்மீரை அடைந்துள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வரும் ஜனவரி 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அங்கே ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்குமாறு 21 அரசியல் கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ராகுல் காந்தியின் யாத்திரையின் பொழுது ஏராளமான பொதுமக்கள் குவிந்த நிலையில் பாதுகாப்பு பணியில் போலீஸ் இல்லாததால் பாத யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.
பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரை எங்கும் காணவில்லை. நாங்கள் சுரங்க பாதையை கடந்த பிறகு போலீஸ் பாதுகாப்பு சீர்குலைக்கப்பட்டது. பாதுகாப்பு சரியாக வழங்கப்படவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு இருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழா நடைபெறும் பொழுது அதிகப்படியான மக்கள் கூட்டம் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு மல்லிகார்ஜுன கார்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாதயாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கடிதம் எழுதி இருந்தார். இதற்கு உள்துறை அமைச்சகம் யாத்திரை பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Congress letter to Amit Shah needs security for Rahul Gandhi