தீவிரவாதத்திற்கு எதிரான போரில் காங்கிரஸ் இரண்டு பிரதமர்களை இழந்துள்ளது! பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி!
Congress party responds to PM Modis criticism of Congress party
குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற பொது தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக குஜராத் மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கேடா மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி "காங்கிரஸ் கட்சி தங்களின் வாக்கு வாங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை.
அவர்கள் பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்கள். அவர்களிடமிருந்து குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயங்கரவாதம் இந்தியாவில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும் என்பது உண்மை" என பேசி இருந்தார்.
பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "நாட்டை பலப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் காங்கிரஸ் இரண்டு புகழ்பெற்ற மற்றும் உலகம் மதிக்கும் பிரதமர்களை இழந்துள்ளது. குஜராத்தில் நடப்பது சட்டம் தேர்தல் தான் நாடாளுமன்ற தேர்தல் அல்ல.
குஜராத் மாநிலத்தை பாதிக்கும் பிரச்சனைகள் பற்றி ஆளும் பாஜக முன் வைத்துள்ளோம். பாஜக அரசின் வெற்றி தோல்விகளை அவர் பேசினால் நல்லது. பாஜகவை சேர்ந்த தலைவர்கள் யாராவது நாட்டின் சுதந்திரத்திற்கு போராடி உள்ளார்களா?" என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்புகிறார்.
English Summary
Congress party responds to PM Modis criticism of Congress party