அதிமுக கூட்டத்தில் கும்மாங்குத்து! எஸ்பி வேலுமணி முன்னிலையில் ரகளை! அதிர்ச்சி வீடியோ! - Seithipunal
Seithipunal


அதிமுக கூட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக அரங்கேறி உள்ளது.

நெல்லை மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் சில அறிவுறுத்தல்களையும் தெரிவித்து கொண்டு இருந்தனர்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற கொள்கை பரப்புச் செயலாளர், அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை செய்யவில்லை என புகார் அளித்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

புகார் சொன்ன அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையா உடன், மாவட்ட செயலாளர் கணேசன் ராஜா தரப்பு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. 

ஒரு கட்டத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே கைகலப்பாக இந்த மோதல் மாறியது. இதனால் கூட்டமே போர்க்களமாக மாறியது. பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டவர்களின் அறிவுத்தவர்களின் பெயரில் இரு தரப்பினரும் அமைதியாகினர். 

வீடியோ நன்றி: புதிய தலைமுறை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Meet Clash in nellai SP Velumani


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->