தவெக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் 27-ம் தேதி  நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த மாதம் 3-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நிலையில், பின்னர்  மீண்டும் அரசியல் பணியில் சில நாட்கள் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் தவெக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலின் படி, 100 மாவட்ட செயலாளர்கள், அமைப்பளர்கள் மற்றும் பொறுப்பளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில்பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், மாவட்ட செயலாளர்களை தரவு செய்யும் பணி நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk district secretary list release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->