காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இடைநீக்கம் ரத்து! - Seithipunal
Seithipunal


சிறப்பு உரிமை குழு மொழிந்ததை தொடர்ந்து, காங்கிரசின் மூத்த மாநிலங்களவை எம்.பி ரஜனி அசோக் ராவ் பாட்டிலை மீண்டும் அவையில் சேர்த்து அவரது இடைநீக்கம் என்று ரத்து செய்யப்பட்டது.

புதுடெல்லி: இது குறித்து சிறப்பு உரிமைக்குழு தெரிவிக்கையில், "மூத்த எம்.பி ரஜனி அவையினுள் எடுக்கப்பட்ட வீடியோவை பரப்பியதற்காக அவர் சிறப்புரிமையை மீறியவராக கருதப்படுகிறார். 

கடந்த 4மாதங்களாக இதற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடைநீக்கம் அவருக்கு தண்டணையாக கருதப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் முன்னதாக நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து வெளியில் பகிர்ந்ததற்காக ரஜனி பாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடரின் பிப்ரவரி 10ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.  

அவைத்தலைவர் ஜக்தீப் தன்கரிடம், பாஜக எம்.பி. ஜி.வி.எல் நரசிம்மராவ் ரஜனிக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுப்பட்டது. 

ரஜனியை இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும் நரசிம்ம ராவ் கோரிக்கை விடுத்திருந்தார். காங்கிரஸ் எம்.பி, தான் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்தும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. 

எதிர்க்கட்சியினர் ரஜனியின் இடைநீக்கத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜனி, ''சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எதையும் நான் வேண்டுமென்றே செய்யவில்லை.

எனக்கு நீதி வழங்கப்பட வேண்டும். ஏன் மீது குற்றம் சாட்டப்பட்டு, உடனடியாக கடுமையான தண்டனை வழங்கப்பட்டது அநீதியானது.

என்மீது வேண்டுமென்றே குற்றம்சாட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்" என்று தெரிவிதிருந்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப பணியாற்றுவேன் என இன்று நாடாளுமன்றம் வந்த ரஜனி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Rajya Sabha member suspension canceled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->