காங்கிரஸ் வெளியிட்ட மோடியின் 'கயாப்' புகைப்படம் நீக்கம்...!
Congress removes Modi kayab photo
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு தற்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சையானது, இந்தியாவிற்கு தேவைப்படும் நேரத்தில், 'கயாப்' அதாவது 'காணவில்லை' என்ற தலைப்புடன் மோடியின் தலையில்லாத கேலிச் சித்திரப் புகைப்படம், இணையத்திலும், சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்தது தற்போது வைரலாகி வருகிறது.
இதில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமஷ் , சிறப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாததை விமர்சித்தார். மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேரமில்லாமல், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் பகிர்ந்த கேலிச் சித்திரத்துக்கு பாஜக தலைவர்கள் பலரிடமும் இருந்து கடுமையான கண்டனங்கள் வந்தன. மேலும், பாஜக இந்த விவகாரத்தை பெரும் சர்ச்சையாக்கிய நிலையில் காங்கிரஸ் தனது பதிவை தற்போது நீக்கியுள்ளது.
English Summary
Congress removes Modi kayab photo