கேஸ் சிலிண்டருடன் சைக்கிளில் வந்த எம்எல்ஏ..! சைக்கிள் கேப்பில் வாக்கு சேகரித்த காங்கிரஸ்..!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வகுப்பு பதிவு இன்று நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 70 பெண்கள் உட்பட 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அம்ரேலி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி வாக்களிக்க சைக்கிளில் ஒரு சிலிண்டரையும் எடுத்துக் கொண்டு வந்தார்.

வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர் "சுயநலம் மற்றும் அச்சம் என்ற சுவர்களுக்கு இடையே குஜராத்தை அடிமையாக மாற்ற பாஜக சதி செய்கிறது. அரசின் தோல்வியால் பணவீக்கமும் வேலையின்மையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,100 க்கு மேல் உள்ளது. மின் கட்டணம், போக்குவரத்து கட்டணம் உயர்ந்துள்ளது. 

பாஜக அரசின் தோல்வியால் மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே குஜராத் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் தேவை.  காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக மக்களின் கவனம் ஈர்க்கும் வகையில் இவ்வாறு செய்தேன்" என காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏவின் இத்தகைய செயல் குஜராத் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CongressMLA came on bicycle with gas cylinder cast vote in Gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->