நீங்கள் எனக்கு அளித்த அன்பையும், மரியாதையும் நான் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதிப்பேன் - சோனியா காந்தி.! - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே இன்று டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

அந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி தெரிவித்ததாவது, 

"காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்பு காங்கிரஸ் நிறைய சிரமங்களைச் சந்தித்தது. ஆனால் இந்த பிரச்சினைகளை சமாளிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். "நான் இன்று மிகவும் நிம்மதியாக உணர்கிறேன். நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று விளக்குகிறேன். 

நீங்கள் எனக்கு அளித்த அன்பையும், மரியாதையும் நான் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதிப்பேன். அந்த மரியாதை மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தது. இதுவரை என்னால் முடிந்த அளவுக்கு எனது பணியினை நான் சிறப்பாக செய்தேன். என் தோல்களின் மேல் ஒரு சுமை இருந்தது. இன்று அந்த பொறுப்புகளில் இருந்து நான் விடுபடுகிறேன். 

அதனால் நான் மிகவும் நிம்மதியாக உணருகிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பது மிகப் பெரிய பொறுப்பு. இனி இந்த பொறுப்பு மல்லிகார்ஜுன் கார்கேவினுடையது. இதுவரை காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்தித்துள்ளது. அந்தச் சவால்களை நாம் முழு பலத்துடன் ஒற்றுமையாக முன்னேறி வெற்றி பெற்றோம். தற்போது நமது முன்னால் நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மிகப் பெரிய சவாலாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congross head office mallikarjun karke responsibility soniyagandhi speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->