கர்நாடகா அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய ஒப்பந்ததாரர் தலைவர் கெம்பெண்ணா கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவராக கெம்பண்ணா இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் தோட்ட துறை அமைச்சர் முனிரத்னா மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்தார். பின்னர், பா.ஜ.க. ஆட்சி செய்யும் கர்நாடக அரசு 40% லஞ்சம் பணம் பெற்றுள்ளது என்று, பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். 

மேலும், அதிகமாக நடைபெறும் ஊழலால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் எந்த பணியையும் பெற முடியாமல், பிற மாநிலங்களை சேர்ந்த நபர்களே பணிகளை பெறுகின்றனர் என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் பாட்டீல் என்ற கட்டிட ஒப்பந்ததாரர் அரசு திட்ட பணிகளில் 40 சதவீதம் லஞ்சம் பெற்றுள்ளார் என்று கூறி, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டை தெரிவித்தார். 

இதேபோன்று, பல ஒப்பந்ததாரர்கள் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், ஒரு மாத காலம் கட்டிட பணி நிறுத்தம் செய்யப்படும் என்றும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு அறிவித்தது. 

இதையடுத்து ஒப்பந்ததாரர்களின் பல கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று அரசு உறுதியளித்த நிலையில், போராட்டத்தை வாபஸ் வாங்கினர். இருப்பினும், ஒப்பந்ந்ததாரரின் தலைவர் கெம்பண்ணா கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து அமைச்சர் முனிரத்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கெம்பண்ணா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், இதுவரை அவர் நேரில் ஆஜராகாமல் இருந்ததனால், அவரை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் போலீசார் கெம்பண்ணாவை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

contractor association president arrested for against corruption in karnataga govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->