#BREAKING | அனைத்து இடங்களிலும் முககவசம் கட்டாயம்! காரைக்காலில் கொரோனாவுக்கு முதல் பலி! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக காரைக்காலில் கொரோனா நோய்த்தோற்று பரவல் அதிகரித்துவருவதால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று, அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தோற்று பரவல் சமீப காலமாக அதிகரித்துவருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். 

மேலும் தியேட்டர், வணிக வளாகங்கள், மருத்துவமனை மற்றும் பொது மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 


காரைக்கால் ​மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் காரணமாகவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona death issue Karaikal Mask Must


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->